R-10 எம்.ஜி.ஆர்.நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல்கு ழுவினர் நேற்று மதியம், நெசப்பாக்கம், கண்ணதாசன் 2வது தெருவில் உள்ள ஒரு வீட்டை கண்காணித்து, சோதனை செய்த போது, அவ்வீட்டில் உரிய அனுமதியின்றி பட்டாசுகளை பதுக்கி வைத்து, ரகசியமாக விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து R-10 MGR Nagar காவல் நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்து, சட்ட விரோதமாக பட்டாசுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த செல்வகுமார், வ/38, த/பெ.கோவிந்தன், கண்ணதாசன் 2வது தெரு, நெசப்பாக்கம், சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து சுமார் ரூ.1 இலட்சம் மதிப்புள்ள 320 பேப்பர்ரோல் பட்டாசுகள் (பெரியது), 104 பேப்பர்ரோல் பட்டாசுகள் (சிறியது), 1,854 சணல்பட்டாசுகள் (சிறியது) பறிமுதல் செய்யப்பட்டது. கைப்பற்றப்பட்ட பட்டாசுகளில் சிலவகை பட்டாசுகள் அனுமதிக்கப்பட்ட டெசிபல் அளவைவிட அதிக சத்தத்துடன் வெடிக்க கூடியவை ஆகும்.
கைது செய்யப்பட்ட எதிரி செல்வகுமார் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.