எம்.கே.பி.நகரில் நடந்து சென்ற பெண்ணின் கைப்பையை பறித்துக் கொண்டு தப்பிய 1 இளஞ்சிறார் உட்பட 2 நபர்கள் பிடிபட்டனர்..

சென்னை, கொடுங்கையூர், கிருஷ்ணமூர்த்தி நகரைச் சேர்ந்த சுஜாதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பெ/வ.30 என்பவர் அப்பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார். சுஜாதா, நேற்று காலை சுமார் 10.30 மணியளவில் வேலை முடித்து வீட்டிற்கு செல்ல, எம்.கே.பி.நகர் 13வது மத்திய குறுக்கு தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த போது, டியோ இரு சக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் சுஜாதா வைத்திருந்த பணம் மற்றும் செல்போன் அடங்கிய கைப்பையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்து சுஜாதா கொடுத்த புகாரின் பேரில், P-5 எம்.கே.பி.நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

P-5 எம்.கே.பி.நகர் குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தினருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்து, மேற்படி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 1.ஜெயகுமார் (எ) பல்தேச்சி (எ) கண்ணையாராம், வ//19, த/பெ.மாரிமுத்து, குடிசைப்பகுதி, 64வது பிளாக், சத்யமூர்த்திநகர், வியாசர்பாடி, சென்னை என்பவரை கைது செய்தனர். மேலும், மேற்படி வழக்கில் தொடர்புடைய 17 வயது இளஞ்சிறார் பிடிபட்டார். எதிரிகளிடமிருந்து புகார்தாரரின் 1 செல்போன் உட்பட 2 செல்போன்கள் மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 டியோ இரு சக்கரவாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் பிடிபட்ட 2 நபர்களும், நேற்று காலை P-3 வியாசர்பாடி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பள்ளதெருவில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் செல்போன் பறித்துச் சென்றது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட எதிரிகள் மற்றும் கைது செய்யப்பட்ட ஜெயகுமார் நீதிமன்றத்திலும், பிடிபட்ட இளஞ்சிறார் சிறுவர் நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »