மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது சீமானுத்து ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட மாமரத்துபட்டியில் சுமார் 50 ஆண்டுகாலமாக நீர்வரத்து பாதை ஆக்கிரமிப்பு செய்யப் பட்டிருந்ததுஇதுகுறித்து அப்பகுதி மக்கள் இதனை சரி செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி தரவேண்டும் என சீமானுத்து ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் அஜித் பாண்டியிடம் கோரிக்கை விடுத்தனர்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் அஜித் பாண்டி மாமரத்துப்பட்டி முதல் கிராமம் வரையிலும் நல்லி வீரன் பட்டி முதல் மாமரத்து பட்டி கிராமம் முதல் கல்லூத்துவரையிலும் நீர்வரத்து பாதையில் சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு கண்டறிந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டு நீர்வழி பாதைக்கு அளவீடு செய்து கால் ஊன்றி கோரிக்கையை நிறைவேற்றி கொடுத்துள்ளார்.
50 ஆண்டு காலமாக முந்தைய ஊராட்சி மன்ற தலைவர்கள் யாரும் நிறைவேற்றாத கோரிக்கையை நிறைவேற்றி கொடுத்த சீமானுத்து ஊராட்சி மன்ற தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கிராம மக்கள் சுவரொட்டி அச்சிட்டு உசிலம்பட்டி பகுதி முழுவதும் தங்களுடைய நன்றியை தெரிவித்து ஒட்டியுள்ளனர் இந்த நிகழ்வு உசிலம்பட்டி பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.