ஆண்டிபட்டி – தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகாவுக்கு உட்பட்ட உ . அம்மாபட்டியில் ஊராட்சித் தலைவராக கவிதா நாகராஜ் பதவியேற்ற முதல் மக்கள் குறைகளை கேட்டு குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்து வருகிறார்.
மத்திய அரசானது கிராமங்களிலும் மக்கள் அனைவருக்கும் நல் சே ஜல் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தை தொடங்கியது. தற்போது இத்திட்டத்தின் மூலம் உ.அம்மாபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது வருகிறது. இப்பகுதியிலுள்ளபொதுமக்கள் ஒரு சிலர் தரமற்ற குழாய்களை ஒப்பந்தகாரர்கள் பயன்படுத்துவதாக பஞ்சாயத்து தலைவர் கவிதா நாகராஜ் முறையிட்டுள்ளார்கள். உடனே ஊராட்சித் தலைவர் குழாய் பதிக்கும் இடத்திற்குச் சென்று குழாயினை ஆராய்ந்து தரமான குழாய்களை பயன்படுத்தும் படி ஒப்பந்த காரருக்கு உத்தரவிட்டார். உடனே தரமான பினோலெக்ஸ் குழாய்கள் கொண்டுவந்து பதிக்கப்பட்டது. அத்துடன் பணி முடியும் வரை உடனிருந்து பார்த்துக் கொண்டார். மேலும் புகார் அளித்த பொதுமக்கள் உடனுக்குடன் தீர்வு கண்ட ஊராட்சித் தலைவரின் செயலுக்கு தங்களின் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.