தூத்துக்குடி – மாவட்ட தடகள சங்கம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து நடத்திய இளைஞர்களுக்கான மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் தூத்துக்குடி தருவை மைதானத்தில் வைத்து நடைபெற்றது.
இப்போட்டியில் 100 மீட்டர் 200 மீட்டர் 1500 மீட்டர் தடை ஓட்டம் மற்றும் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல் போன்ற பல்வேறு தடகள போட்டிகள் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி முதலாமாண்டு ஆங்கில இலக்கியம் பயிலும் மாணவி சகானா உயரம் தாண்டுதல் போட்டியில் பங்குபெற்று 175 சென்டிமீட்டர் உயரம் தாண்டி தூத்துக்குடி மாவட்டத்தின் பழைய சாதனையை முறியடித்தார். இப்போட்டியை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார்
தொடங்கி வைத்தார்.
போட்டியின் நிறைவு நாளன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில் ராஜ் பங்கு பெற்று போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் மற்றும் பதக்கங்களை அணிவித்து கவுரவித்தார். மேலும் நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட அளவிலான உயரம் தாண்டும் போட்டியில் புதிய சாதனை படைத்த சகானாவுக்கு மாவட்ட ஆட்சியர் பதக்கங்களையும் சிறப்பு பரிசுகளை வழங்கி பாராட்டினார். மேலும் இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அதிகாரி பேட்ரிக் வின்சென்ட் மற்றும் தூத்துக்குடி மாவட்ட தடகள தலைவர் அருள் முருகன், மாவட்ட தடகள செயலாளர் பழனிச்சாமி, பொருளாளர் அருள் சகாயம் மற்றும் பல்வேறு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குனர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் பங்கு பெற்று சாதனை படைத்த சகானாவிற்கு தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி உடற்கல்வி இயக்குனர் சிவஞானம் மற்றும் கல்லூரியின் முதல்வர் வீரபாகு மற்றும் கல்லூரியின் செயலர் கல்வித்தந்தை ஏபிசி வி சொக்கலிங்கம் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் அனைவரும் பாராட்டினை தெரிவித்தனர். நிகழ்ச்சியில் தடகள சங்க செயலர் பழனிச்சாமி நன்றி கூறினார்.