மதுரை மாவட்டம் உசிலம்பட்டி திருமங்கலம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில் ஒரு மாதம் தொடர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் திமுக நகர இளைஞரணி சார்பாக இளைஞரண அமைப்பாளர் எஸ்பிஎம் சந்திரன் தலைமையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் 500க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கபட்டது.
இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் தங்கமலைபாண்டி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் விஜய், நகர இளைஞரணி துணை அமைப்பாளர் கீழப்புதூர் சரவணன், ஜெகன், தினேஷ், மகளிரணி மாவட்ட துணை அமைப்பாளர் அனுராதா, வார்டு அமைப்பாளர்கள் விஜி கோகுல் ரவி, இளையராஜா, சிவசந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.