கன்னியாகுமரி –
ஈத்தாமொழி அருகே மது குடித்தபோது ஏற்பட்ட தகராறில் கட்டிட தொழிலாளியை அடித்து கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர். மேலும், 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே உள்ள புதூர் காலியாயன்விளைைய சேர்ந்தவர் திருமலை பெருமாள் என்ற கண்ணன். இவர், அதே பகுதியில் தும்பு ஆலை வைத்து நடத்தி வருகிறார். அவர் நேற்று காலை வழக்கம்போல் ஆலைக்கு வந்தார். அப்போது ஆலையின் வளாகத்துக்குள் ஒரு வாலிபர் காயங்களுடன் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே, இதுபற்றி ஈத்தாமொழி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இது பற்றி தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா, ஈத்தாமொழி சப்-இன்ஸ்பெக்டர் பொன்கீதா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விஜயேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை பார்வையிட்டனர். அங்கு பிணத்தின் அருகில் ஒரு பெரிய மரக்கட்டை கிடந்தது. நள்ளிரவில் யாரோ அந்த வாலிபரை மரக்கட்டையால் அடித்து கொலை செய்தது தெரிந்தது.
இதையடுத்து மோப்ப நாய் ஏஞ்சல் வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் ஏஞ்சல் பிணம் கிடந்த பகுதியில் இருந்து செம்பொன்கரை ஆற்றங்கரை வரை சென்று நின்றது. தடயவியல் நிபுணர் ஜீவானந்தம் அங்கிருந்த கைரேகைகளை சேகரித்தார்.
இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட வாலிபர் நங்கூரான்பிலாவிளையை சேர்ந்த கண்மணி என்பவரது மகன் ஈஸ்வரன் (வயது 30) என்பதும், அவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
ஈஸ்வரன் மற்றும் அவருடைய சகோதரர்கள் ராஜேஷ்(27), வினோ(25) மற்றும் ஈஸ்வரனின் நண்பர்களான செம்பொன்கரையை சேர்ந்த ஜெகதீஷ்(28), நாகராஜன்(35) ஆகியோர் சேர்ந்து நேற்று முன்தினம் இரவு அங்கு மது குடித்துள்ளனர். அப்போது, ஈஸ்வரனுக்கும் அவருடைய அவருடைய தம்பிக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டத இதனால் ஆத்திரமடைந்த ஈஸ்வரனின் தம்பி தனது நண்பர்களுடன் சேர்ந்து சேர்ந்து கொலை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது கொலையாளிகளை கைது செய்வதற்கு போலீசார் வலைவிரித்து தேடி வருகின்றனர்