இரயில்வே நிலையங்கள் மற்றும் மார்க்கெட் பகுதிகள் என மொத்தம் 166 இடங்களில் “காவல்உதவி” செயலியின் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப் பட்டது. சென்னையில் உள்ள 12 நடை மேம்பாலங்கள் கண்காணிக்கப் பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 04.04.2022 அன்று பொதுமக்கள் காவல் துறையின் அவசர உதவியை நாடுவதற்கு ‘‘காவல்உதவி‘‘ என்ற செல்போன் செயலியை அறிமுகப்படுத்தி, அதன் பயன்பாட்டை துவக்கி வைத்தார். இந்த செயலியில் அவசர உதவிக்கு காவல் துறையை தொடர்பு கொள்ளவும், காவல் கட்டுப்பாட்டறையை தொடர்பு கொள்ளவும், காவல் நிலையங்கள் இருக்கும் இடம் அறிந்து கொள்ளுதல், சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்கக்கூடிய இடங்கள், உள்பட 60 சிறப்பம்சங்கள் உள்ளது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால், உத்தரவின் பேரில் பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இச்செயலில் குறித்து பொதுமக்கள் மற்றும் பெண்கள், மாணவ, மாணவிகள் அறிந்திடும் வண்ணம், காவல் துறை சார்பில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களில், “காவல்உதவி” செயலி (Kaval Uthavi App) குறித்து விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில், (14.02.2023) சென்னை பெருநகரில் உள்ள 59 கல்லூரிகள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகிலுள்ள 55 பேருந்து நிறுத்தங்கள், 28 மற்ற பேருந்து நிலையங்கள், 6 இரயில் நிலையங்கள் மற்றும் 18 சந்தை பகுதிகள் என மொத்தம் 166 இடங்களில், பொதுமக்கள், பெண்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு காவல் உதவி செல்போன் செயலிகுறித்த விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு, விழிப்புணர்வு பிரசுரங்கள் (Awareness Pamphlets) வழங்கப்பட்டது. மேலும், இச்செயலியை தரவிறக்கம் செய்வது மற்றும் பயன்பாடுகள் குறித்தும், இச்செயலியை பயன்படுத்தும் விதம் குறித்தும் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், சென்னை பெருநகரில், சாலைகள் மற்றும் இரயில்வே பாதைகளில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தும் 12 நடை மேம்பாலங்கள் கண்காணிக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மேற்கொண்டு வரும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக. இது போன்ற விழிப்புணர்வு முகாம்கள் அவ்வப்போது நடத்தப்படும், என சென்னை பெருநகர காவல் துறை சார்பாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »