இரணியல் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக இரண்டு வகுப்பறைகள் கட்டப்பட்டன இதனை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சத்தை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் ஒதுக்கீடு செய்து அடிக்கல் நாட்டினார். இந்தநிலையில் புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்து அதன் திறப்பு விழா நடந்தது
வசந்தகுமார் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் எச் வசந்தகுமார் இவர் காங்கிரஸ் கட்சியின் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். கடந்த ஆண்டு உடல்நிலை குறைவால் காலமானார். பின்னர் அவரது மகன் விஜய் வசந்த் அவர்கள் இடைத்தேர்தலில் போட்டுயிட்டு கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். தனது தந்தையின் நிதிலிருந்து ஒதுக்கி கட்டப்பட்ட பள்ளியை திறந்து வைக்க வேண்டும் என்று சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார்.
விழாவுக்கு பள்ளி முன்னாள் மாணவர் சங்க தலைவர் ராஜகோபாலன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி வரவேற்றார். பிரின்ஸ் எம்எல்ஏ தக்கலை கல்வி மாவட்ட அதிகாரி ராமச்சந்திரன், பொறியாளர் ராஜா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பின்னர் வசந்தகுமார் அவரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. வசந்தகுமார் எம்பி அடிக்கல் நாட்டிய கட்டப்பட்ட வகுப்பறைக் கட்டிடத்தை அவருடைய மகனும் தற்போதைய கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
முடிவில் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரவி ராஜ் நன்றி கூறினார் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்கள் மற்றும் மாணவிகள் செய்திருந்தனர்.