இந்திய விளையாட்டு ஆணையத்தின் பெயரிலான முதலாவது விருதுகளை, 246 விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், இணையமைச்சர் நிஷித் பிரமானிக் முன்னிலையில் இன்று வழங்கினார். விளையாட்டுத் துறை செயலாளர் திருமதி சுஜாதா சதுர்வேதி, இந்திய விளையாட்டு ஆணையத்தின் தலைமை இயக்குநர் சந்தீப் பிரதான் மற்றும் அமைச்சகத்தின் உயரதிகாரிகள் விழாவில் கலந்து கொண்டனர்.
புதுதில்லி ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்திய 162 வீரர்கள் மற்றும் 84 பயிற்சியாளர்களுக்கு விருதுகள் மற்றும் ரூ.85.02 லட்சம் மதிப்பிலான ரொக்கப்பரிசுகளும் வழங்கப்பட்டது.
2016 ஆம் ஆண்டு முதல் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டுகளை ஊக்குவிப்பதற்காக செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் கீழ் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. 2016-17, 2017-18, 2018-19 மற்றும் 2019-20 ஆம் ஆண்டுகளில் தலைசிறந்த விண்ணப்பதாரர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அனுராக் தாக்கூர், இன்று விருது வழங்கப்பட்ட அனைத்து வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை மனதார வாழ்த்துகிறேன். விளையாட்டு என்பது நமது பிரதமர் நரேந்திர மோடியின் இதயத்தோடு மிகவும் ஒன்றிப்போனது என்பதோடு, அவரது தொலைநோக்கு எண்ணங்களை மேலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும், விளையாட்டு வீரர்களுக்கு ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீரரும் அவரது தலைமுறைக்கு ஊக்கமளிப்பவராக திகழ்கிறார் என்று தெரிவித்தார்.