தமிழ்நாடு 03 ஜனவரி 2022: இந்தியாவில் உள்ள அக்ஷய பாத்ரா அறக்கட்டளை (TAPF) நிறுவனமும் , ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் (WFP) அமைப்பும் ‘பிரதான் மந்திரி போஷன் ஷக்தி நிர்மான்’ (PM POSHAN) திட்டத்தினை (முந்தைய மதிய உணவுத் திட்டம்) திறம்பட மேம்படுத்த கைகோர்த்திருக்கிறது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது ஐநா-வின் உலக உணவுத் திட்டத்தின் இந்திய பிரதிநிதியும், இயக்குநருமான திரு.பிஷோ பராஜூலி மற்றும் அக்ஷய பாத்ரா அறக்கட்டளையின் துணைத் தலைவர் ஸ்ரீ சஞ்சலப்தி தாசா ஆகியோருக்கு இடையே இன்று புது தில்லியில் கையெழுத்தானது.
“இந்தக் கூட்டாண்மையானது கூடுதலாக பணியாற்றவும், ஆழ்ந்த அனுபவத்தின் பகிர்வாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1961 ஆண்டு தொடங்கப்பட்டது முதல் இன்று வரை பள்ளி உணவுத் திட்டத்தினை மேம்படுத்துவதில் நிபுணத்துவத்துடன் இயங்கிவருகிறது உலக உணவுத் திட்டம் அமைப்பாகும். இந்த WFP ஆனது ஆறு தசாப்தங்களாக பள்ளி உணவு வழங்குவதை செயல்படுத்திவருகிறது. இந்த அனுபவத்தின் மூலம், நிலையான தேசிய பள்ளி உணவு திட்டங்களை அமைப்பதற்கு 100-க்கும் மேற்பட்ட நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவதற்கான பாதையையும் ஏற்படுத்தியுள்ளது” என்றார் திரு.பராஜூலி.
மேலும் கூறும்போது, “ கடந்த ஆண்டு ஐநா-வின் உலக உணவுத் திட்டமானது, ஒரு ஒருங்கிணைப்பு அமைப்பாக இந்தியாவின் பள்ளி உணவுத் திட்டத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துவருகிறது. இது உலகின் மிகப்பெரிய பள்ளி உணவு திட்டத்தை செயல்படுத்துவதால், பள்ளி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்கிறது. இந்தியாவின் சிறந்த பள்ளி உணவுத் திட்டங்கள் மற்றும் பல்வேறு தொடர்புடைய முன்முயற்சிகள் மற்ற நாடுகளுக்கு ஆர்வமாக இருக்கலாம், ”என்று அவர் மேலும் கூறினார்.
“உணவுப் பாதுகாப்பை ஏற்படுத்துவதில் நாடு முன்னேறியுள்ளது. இந்தியாவில் பள்ளி உணவுத் திட்டமானது குழந்தைகளுக்கு உணவுப் பாதுகாப்பை கூடுதலாக உறுதி செய்துள்ளது. இந்த சிறப்புமிக்க கூட்டாண்மை மூலம், அனைத்துவித படிநிலைகளிலும் மக்களுக்கு பசியை நிவர்த்தி செய்வதில் எங்களின் நிபுணத்துவத்துடன், உலகெங்கிலும் பெரிய அளவிலான உணவுத் திட்டங்களை நடத்தும் WFP-யின் உலகளாவிய நெட்வொர்க் அனுபவமும் இணைவதால் சிறந்த சேவையை வழங்க முடியுமென்பதில் உறுதியாக இருக்கிறோம்.” என்று அக்ஷய பாத்ரா அறக்கட்டளையின் துணைத் தலைவர் ஸ்ரீ சஞ்சலப்தி தாசா கூறினார்.
மேலும் கூறுகையில், “ குழந்தைகள் சாப்பிடுவதற்காக உழைக்க வேண்டியதில்லை; குழந்தைகள் கற்றுக்கொள்வதற்கு முன், சம்பாதிக்க வேண்டிய அவசியமில்லை எனும் வாசகத்தை மனதில் கொண்டுள்ளோம். இதற்காக, பள்ளி உணவு திட்டத்தில் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கும் உலகளாவிய தெற்கிற்கும் இடையே க்ராஸ் – லேர்னிங் பயிற்சியை எதிர்பார்க்கிறோம். “ என்று முடித்தார்.
பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு எதிரான போராட்டத்தில் இரு அமைப்புகளுமே கூட்டு அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தைப் பெற்றுள்ளது. அதன்மூலமாக, இந்த நீண்ட கால கூட்டாண்மையானது உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் திட்டங்கள், சமைப்பவர்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்களின் திறன்கள் மற்றும் வழங்கப்படும் உணவின் ஊட்டச்சத்து தரம் ஆகியவற்றின் நடுவே இருக்கும் இடைவெளியை நீக்குகிறது. சிறந்த தரமான உணவுகளை குழந்தைகளுக்கு வழங்குவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட இருக்கிறது.
இந்தியாவில் PM-POSHAN திட்டத்தை செயல்படுத்தப்படுத்த, இரு நிறுவனங்களுக்கு இடையேயான அறிவுப் பகிர்வு முதல் கூட்டாக பயிலரங்குகள் வரை மேற்கொள்ளப்பட்டது. அதோடு, முன்மொழியப்பட்ட கூட்டாண்மையின் ஒரு பகுதியாக, பள்ளி உணவுத் திட்டத்தின் தரத்தை மேம்படுத்துவதற்காக, கொள்கை மற்றும் திட்டம் தொடர்பான கூறுகளை முன்வைக்க அரசாங்கத்துடன் உரையாடல்களையும் மேற்கொள்வதும் உள்ளடக்கும்.
ஐநா-வின் உலக உணவுத் திட்டம் மற்றும் அக்ஷய பத்ரா ஆகிய இரு அமைப்புகளும் இணைந்து பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு வழிநடத்தல் குழுவை உருவாக்கும், இது இந்த ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்களை திட்டமிட, விவாதிக்க மற்றும் மதிப்பாய்வு செய்ய காலாண்டுக்கு ஒருமுறை கூடும். அதோடு, இரு நிறுவனங்களும் செயல்பாடுகளைச் செயல்படுத்துவதற்குத் தேவையான நிதி ஆதாரங்களை மேற்கொள்ளும் என்பது ஹைலைட்.