ஆண்டிபட்டி – தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா மறவபட்டி கிராமம் காமாட்சியம்மன் பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு காமாட்சி அம்மன் மற்றும் செல்வ விநாயகர் கோவில் நூதன ஆலய மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களாக நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. அதனை முன்னிட்டு விக்னேஸ்வரா பூஜை, ஆராதனம், புண்ணிய வாசனம், கோமாதா பூஜை, , வேதிகா ஆராதனம் ,பரிவார தேவதைகள் மற்றும் நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்று ,மஹா பூர்ணாகுதி நிகழ்ச்சி நடந்தது. இதனையடுத்து நேற்று யாத்ரா தானம் தொடர்ந்து கடங்கல் புறப்பாடாகி, ஒன்பது மணிக்கு மேல் ராஜகோபுரம் மற்றும் மூல கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது . பல்வேறு புண்ணிய ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் விமானங்களில் ஊற்றப்பட்டு, பக்தர்கள் மேல் தெளிக்கப்பட்டது .அந்த நேரம் கருடன் கோவிலை வலம் வந்ததால் பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து மூலஸ்தானத்தில் சிறப்பு வழிபாடுகளும், மகா தீபாராதனையும் காட்டப்பட்டது. அதனையடுத்து எஜமானர் மரியாதை செய்யப்பட்டு. ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை நிர்வாகக் குழுவினர் மற்றும் காமாட்சியம்மன் பங்காளிகள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.