ஆண்டிபட்டியில் நெடுஞ்சாலை துறையின் புதிய திட்டம் துவக்கம்..

ஆண்டிபட்டி – ஆண்டிபட்டி நெடுஞ்சாலைத் துறையின் மூலம் மாபெரும் வாய்க்கால் மற்றும் மழைநீர் வடிகால்களை தூர்வாரும் திட்டத்தை திமுக சட்டமன்ற உறுப்பினர்  மகாராஜன் துவக்கி வைத்தார். 


கொரோனோ  முதல் மற்றும் இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்டு இந்தியா முழுவதும் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ள நிலையில் தற்போது மூன்றாவது அலை துவங்கிவிடுமோ என்ற  அபாயமும் அச்சமும் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க இந்தியாவை தூய்மையாக்குவோம் என்ற நோக்கத்தில் இந்தியா முழுவதும் சுகாதார பணிகள் அந்தந்த மாநில அரசுகள் மூலம் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக தமிழக முதல்வர் மு .க  ஸ்டாலின் உத்தரவின் பேரில் தேனி மாவட்டம்  ஆண்டிபட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன்  ஆண்டிபட்டி வைகை அணை சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  மாபெரும் வாய்க்கால் மற்றும் வடிகால்கள் தூர்வாரும் திட்டத்தினை துவக்கி வைத்தார் . இதையடுத்து ஜேசிபி இயந்திரம் மூலம் ஆண்டிபட்டி வைகை அணை சாலை,  சக்கம்பட்டி,  பாப்பம்மாள்புரம்,  ஏத்தக்கோவில் சாலை உள்ளிட்ட பல இடங்களில்  வரும் 25-ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் தொடர்ந்து இப்பணிகள் நடைபெறவுள்ளன. 

நெடுஞ்சாலை சாலையோர வாய்க்கால்களில் தொடர்ந்து பல மாதங்களாக தேங்கும்  கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயத்தை தடுக்கும் வகையில்  இப்பணி வேகமாக நடைபெறுகிறது.   நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை ஆண்டிபட்டி உட்கோட்ட உதவி கோட்ட பொறியாளர் திருக்குமரன், உதவி பொறியாளர் முத்துராம், சாலை ஆய்வாளர்கள் சிவப்பிரதா, சரஸ்வதி ஆகியோர்  நேரடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் திமுக மாவட்ட துணைச் செயலாளர் ராஜாராம் ,மாவட்ட நெசவாளர் அணி ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »