ஆக்கிரமிப்பின் பிடியில் ஊரணி, குடிநீர், கழிப்பறை வசதியில்லாத பேருந்து நிலையம் – அடிப்படை வசதியில்லாத எம்.கல்லுப்பட்டி ஊராட்சி – பல வருடங்களாக போராடும் கிராம மக்கள்…

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா எம்.கல்லுப்பட்டி ஊராட்சி,  எம். கல்லுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் பாறைப்பட்டி துள்ளுக்குட்டிநாயக்கனூர் மல்லபுரம் சாணார்பட்டி அய்யனார்புரம்  உள்ளிட்டசிறுசிறு ஊராட்சிகள் அமைந்துள்ளன.
பேரையூர் சாப்டூர் உசிலம்பட்டி தேனி திருமங்கலம் உள்ளிட்ட சுற்றுப்புறபகுதிகளுக்கு செல்ல வேண்டுமானால் எம் கல்லுப்பட்டி வழியாகத்தான் செல்ல வேண்டும்.
பத்தாயிரம் மக்கள் தொகை கொண்ட எம் கல்லுப்பட்டி ஊராட்சியில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. அதாவது எம் கல்லுப்பட்டி ஊராட்சியில் மந்தையில் வழியாகத்தான் அனைத்துப் பேருந்துகளும் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்லவேண்டும்.

ஆனால் அந்த இடத்தில் பேருந்து நிழற்குடை குடிநீர் வசதியோ ஒரு கழிப்பறை வசதியை எந்த விதமான கட்டமைப்பு வசதிகளும் இல்லை வசதிகளும் இல்லை. இதுகுறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே எம் கல்லுப்பட்டி ஊராட்சியில் பேருந்து நிலையம் அமைத்து அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்குமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் 10,000க்கும்மக்கள் தொகை மற்றும் சுற்றுப்புற ஏராளமான ஊராட்சிகளை உள்ளடக்கி அமைந்திருப்பதால் எம் கல்லுப்பட்டி ஊராட்சியை பேரூராட்சியாக மாற்றித் தர வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் எம் கல்லுப்பட்டி ஊராட்சி அனைத்து சமுதாய மக்களையும் ஒன்றிணைத்து ஒற்றுமையாக சகோதரத்துவமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஊராட்சியாக அமைந்துள்ளது.
இந்நிலையில் மந்தையில் அமைந்துள்ள ஊரணி பலவருடங்களாக பொதுமக்களுக்கு பயன்பாட்டிற்கு இருந்து வந்தது. காலப்போக்கில் அந்த ஊரணி ஒரு சில தனிநபர்களின் ஆக்கிரமிப்பு காரணமாக சுருங்கிவிட்டது மேலும் ஊரணியின் கரையில்ஒருசிலர் கரையை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டி பயன்படுத்தி வருகின்றனர். 

இதுகுறித்து பேரையூர் தாசில்தார் அவர்களிடம் புகார் அளித்தால் மிகவும் மரியாதை இல்லாமல் பேசுவதாகவும் ஒரு சில ஆக்கிரமிப்பாளர்களுக்கு  ஆதரவாகவும் வருவதாக அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.

எனவே தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் எம் கல்லுப்பட்டி ஊராட்சியை பேரூராட்சியாக மாற்றி அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி பொது மக்களுக்கு பயன்படும் வகையில் அமைத்து தரவும் ஆக்கிரமிப்புகளை அகற்றி ஊரணியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம் கல்லுப்பட்டி ஊராட்சி சார்பாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »