வருஷநாடு செப்டம்பர் 10: கடமலை மயிலை ஒன்றியத்தில் கரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க வைத்து வழிபட அரசு தடை விதித்துள்ளது
இந்த உத்தரவை மீறி வாய்க்கால் பாறை கோவில் பாறை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் 8 அடி 3 அரை மற்றும் 3 அடி அளவுள்ள மூன்று சிலைகளை வாகனத்தில் கொண்டு வந்துள்ளனர் அப்போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் 3 சிலைகளையும் கைப்பற்றி பறிமுதல் செய்து கடமலைக்குண்டு தனியார் திருமண மண்டபத்தில் வைத்திருந்தனர் மேலும் சிலை கொண்டு வந்தவர்களை கடமலைக்குண்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தனர் இத்தகவல் அப்பகுதியில் காட்டு தீ போல் பரவியது பொதுமக்களும் கடமலை மயிலை ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் கடமலைக்குண்டு காவல் நிலையம் முன்பு கூடியதால் ஆண்டிபட்டி டிஎஸ்பி தங்க கிருஷ்ணன் தலைமையில் காவல் ஆய்வாளர் குமரேசன் வருவாய் ஆய்வாளர் முருகன் முன்னிலையில் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு மூன்று மற்றும் 3 அரை அடி அளவுள்ள 2 சிலையை மட்டும் வீட்டில் வைத்து வழிபட்டு அருகில் உள்ள நீர் நிலையில் கரைத்துக் கொள்ளவும் பொது இடங்களில் வைக்க வழிபட அனுமதி இல்லை என்றும் எட்டு அடி அளவுள்ள சிலையை இந்து அறநிலை துறை யில் போலீசார் ஒப்படைத்தனர் இதனால் சுமார் 3 மணி நேரம் கடமலைக்குண்டு காவல் நிலையம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது