சென்னை, ஆர்.கேநகர் 1வது குறுக்குத் தெருவில் வசித்து வரும் வசந்தகுமார், வ/42, த/பெ. மோகன்டில்லி என்பவர் கடந்த 14.02.2022 அன்று, காலை தனது சைக்கிளை மேற்படி வீட்டிற்கு வெளியில் நிறுத்தி விட்டு மாலை சுமார் 06.00 மணியளவில் பார்த்தபோது, சைக்கிளை யாரோ திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து வசந்தகுமார், E-4 அபிராமபுரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
E-4 அபிராமபுரம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை மற்றும் சம்பவயிடத்தின் அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தும், மேற்படி புகார்தாரரின் சைக்கிளை திருடிய சரவணன், வ/38, த/பெ.நாகராஜன், அஷ்டபுஜம்ரோடு, பிளாட்பாரம், சூளை, சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 5 விலையுயர்ந்த சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் கைது செய்யப்பட்ட சரவணன் மேற்படி புகார்தாரரின் சைக்கிள் உட்பட, இராயப்பேட்டை, மயிலாப்பூர், பட்டினம்பாக்கம் ஆகிய பகுதிகளிலும் விலையுயர்ந்த சைக்கிள் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட சரவணன் விசாரணைக்குப் பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.