அனைத்து கிராமங்களிலும் சிசிடிவி கேமரா பொறுத்த ஊராட்சி தலைவர்கள் கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் ஆலோசனை .

வேப்பூர் –

அனைத்து ஊராட்சிகளிலும்  சிசிடிவி, கேமரா பொறுத்த, வேப்பூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் தலைமையில் நடைபெற்ற  கூட்டத்தில் ஆலோசனை  வழங்கபட்டது
கடலூர் மாவட்டம், நல்லூர் ,மற்றும் மங்களூர் ஒன்றியங்களில்  வேப்பூர்  காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமங்களிலுள்ள ஊராட்சி மன்ற தலைவர்களுடன் வேப்பூர் போலிசார் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.


கூட்டத்திற்கு வேப்பூர் இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு தலைமை தாங்கினார், எஸ்ஐ, ரவிசந்திரன் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் நகர், கோ.கொத்தனூர, மாளிகைமேடு,  மேலக்குறிச்சி, பா.கொத்தனூர், ஆதியூர், ஐவதகுடி, அகரம், பூலாம்பாடி உள்ளிட்ட சுமார் 16 ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர் 
கூட்டத்தில் பேசிய   இன்ஸ்பெக்டர் அனைத்து கிராமங்களிலும் திருட்டை ஒழிக்க, அந்தந்த கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் இளைஞர்கள் போலிசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், கிராமத்திலுள்ள இளைஞர்கள் தங்கள் கிராமத்திற்கு உறவினர் இல்லாத தனி நபர்களோ அல்லது இரண்டு மூன்று பேர் கூட்டாகவோ வந்தால் அவர்களிடம் எதற்காக வந்தீர்கள் என விசாரிக்க வேண்டும், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் தெரிவித்தால் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்,  மேலும் ஊர் பொதுமக்கள் சார்பில் கிராமத்திலுள்ள அனைத்து தெருக்களிலும் சிசிடிவி கேமரா பொறுத்த வேண்டும் அப்படி பொறுத்தும் போது எந்த தெருவில் யார் வீட்டிற்கு மர்ம நபர்களோ அல்லது திருடர்களோ நுழைந்தால் அவர்கள் எந்த வழியாக வந்தாரகள் எந்த வழியாக ஊரை விட்டு வெளியேறினார்கள் அவர்களின் அங்க அடையாளம் கேமராவில் பதியும்,  அதை வைத்து போலிசார் திருடர்களை பிடிக்கும் வாய்ப்பு அதிகமாகும்  ஆகவே, அனைத்து ஊராட்சியிலும் அவசியம் பத்து, பதினைந்து நாட்களுக்குள் சிசிடிவி கேமரா பொறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு பேசினார், இறுதியாக எஸ்ஐ, ரவிசந்திரன் நன்றி கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »