சென்னை, அசோக்நகர், No.22A, என்ற முகவரியில் வசித்து வரும் சிவா (எ) கரன்ட்சிவா, வ/26, த/பெ.ராஜா என்பவர் F5-சூளைமேடு காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். இவர் மீது 12 குற்றவழக்குகள் உள்ள நிலையில், சிவா (எ) கரன்ட் சிவா கடந்த 11.07.2022 அன்று துணை ஆணையாளர், அண்ணாநகர் காவல் மாவட்டம் முன்பு சாட்சிகளுடன் ஆஜராகி, தான் திருந்தி வாழப் போவதாகவும், 1 வருட காலத்திற்கு எந்தவொரு குற்றச்செயலிலும் ஈடுபட மாட்டேன் எனவும், நன்னடத்தை உறுதிமொழி பிணை பத்திரம் எழுதி கொடுத்தார்.
ஆனால் சிவா (எ) கரன்ட் சிவா கடந்த 01.02.2023 அன்று அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து,கொலை முயற்சி குற்றத்தில் ஈடுபட்டதற்காக V-5 திருமங்கலம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.
இதேபோல, சென்னை, நுங்கம்பாக்கம், புஷ்பாநகர், எண்.29 என்ற முகவரியில் வசிக்கும் முகமதுரபிக் (எ) மிட்டாய் ரபிக்,வ/23, S/o. சலீம் என்பவர் F-5 சூளைமேடு காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். இவர் மீது 12 குற்றவழக்குகள் உள்ள நிலையில், முகமது ரபிக்(எ) மிட்டாய் ரபிக் கடந்த 01.02.2023 அன்று துணை ஆணையாளர், அண்ணாநகர் காவல் மாவட்டம் முன்பு சாட்சிகளுடன் ஆஜராகி, தான் திருந்தி வாழப் போவதாகவும், 1 வருட காலத்திற்கு எந்தவொரு குற்றச்செயலிலும் ஈடுபடமாட்டேன் எனவும், நன்னடத்தை உறுதிமொழி பிணை பத்திரம் எழுதிகொடுத்தார்.
ஆனால் முகமது ரபிக் என்கிற மிட்டாய் ரபிக் கடந்த 18.02.2023 அன்று கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக F-3 நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.
எதிரிகள் சிவா (எ) கரன்ட் சிவா மற்றும் முகமது ரபிக் (எ) மிட்டாய் ரபிக் ஆகியோர் 1 வருட காலத்திற்கு எந்தவொரு குற்றச் செயலிலும் ஈடுபட மாட்டேன் என எழுதி கொடுத்த நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறிய குற்றத்திற்காக, செயல்முறை நடுவராகிய அண்ணாநகர் காவல் மாவட்ட துணை ஆணையாளர், ரோகித்நாதன் ராஜகோபால், எதிரி சிவா (எ) கரன்ட் சிவா என்பவருக்குகு.விமு.ச.பிரிவு 107ன் கீழ்பிணை ஆவணத்தில் எழுதி கொடுத்த 1 வருட காலத்தில் நன்னடத்தையுடன் செயல்பட்ட நாட்கள் கழித்து, மீதமுள்ள 160 நாட்களும், எதிரி முகமது ரபிக் (எ) மிட்டாய் ரபிக் என்பவருக்கு கு.விமு.ச பிரிவு 110ன் கீழ் பிணை ஆவணத்தில் எழுதி கொடுத்த 1 வருட காலத்தில் நன்னடத்தையுடன் செயல்பட்ட நாட்கள் கழித்து, மீதமுள்ள 344 நாட்களும் பிணையில் வர முடியாத சிறைதண்டனை விதித்து உத்தர விட்டார்.
அதன் பேரில், மேற்படி எதிரிகள் இருவரும் நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறிய குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டனர்.