சென்னை, திருவான்மியூர், ரங்கநாதபுரம், எண்.63 என்ற முகவரியில் வசித்து வரும் சூர்யா, வ/28, த/பெ.சூசைராஜ் என்பவர் J-6 திருவான்மியூர் காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளி ஆவார். இவர் மீது 1 கொலை வழக்கு உட்பட 5 குற்றவழக்குகள் உள்ள நிலையில், சூர்யா கடந்த 25.05.2022 அன்று அடையார் துணை ஆணையாளர் முன்பு சாட்சிகளுடன் ஆஜராகி, தான் திருந்தி வாழப் போவதாகவும்,1 வருட காலத்திற்கு எந்தவொரு குற்றச் செயலிலும் ஈடுபடமாட்டேன் எனவும், நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் எழுதிகொடுத்தார்.
ஆனால் நன்னடத்தை பிணை பத்திரம் எழுதிக் கொடுத்த சூர்யா, கடந்த 21.12.2022 அன்று தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒருவரை கத்தியால் தாக்கிய குற்றத்திற்காக J-6 திருவான்மியூர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆகவே,எதிரி சூர்யா என்பவர் 1 வருட காலத்திற்கு எந்தவொரு குற்றச் செயலிலும் ஈடுபடமாட்டேன் என எழுதி கொடுத்த நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறி, மீண்டும் குற்றச் செயலில் ஈடுபட்டதற்காக, செயல்முறை நடுவராகிய அடையாறு துணைஆணையாளர், P.மகேந்திரன்,கு.வி.மு.ச. பிரிவு 110 ன் கீழ் எதிரி சூர்யா என்பவருக்கு பிணை ஆவணத்தில் எழுதி கொடுத்த 1 வருட காலத்தில் நன்னடத்தையுடன் செயல்பட்ட நாட்கள் கழித்து, மீதமுள்ள 155 நாட்கள் பிணையில் வர முடியாத சிறை தண்டனை விதித்து உத்தரவு இட்டார். அதன் பேரில் எதிரி சூர்யா நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறிய குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.