புனித தோமையர் மலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு (PEW-St.Thomas Mount) காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் மதியம் அசோக்நகர், 100 அடிரோடு, 4வது அவென்யூ அருகே கண்காணித்த போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 2 நபர்களிடம் விசாரித்த போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகத்தின் பேரில் அவர்களை சோதனை செய்த போது, அவர்கள் மெபட்ரான் போதை பொருள் வைத்திருந்தது தெரிய வந்தது.
அதன்பேரில், சட்ட விரோதமாக மெபட்ரான் போதை பொருள் வைத்திருந்த 1.விக்னேஷ், வ/21, த/பெ.ராமு, எண்.128, மெய்யூர், திருவள்ளூர் மாவட்டம் 2.கார்த்திக், வ/35, த/பெ.பத்மநாபன், எண்.10/15, கோவிந்தசாமி தெரு, ஐஸ்வர்யாநகர், கொடுங்கையூர், சென்னை ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 250 கிராம் (Mephedrone) போதை பொருள் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட விக்னேஷ் மீது ஏற்கனவே வழிப்பறி வழக்கு உள்ளது தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட எதிரிகள் மேற்படி இருவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.