மேல் அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயாவின் 7-ஆம் வகுப்பு மாணவி டோனெட்டா டி சாஜு, ‘ஆரோக்கியமான உணவு, ஆரோக்கியமான உலகம்’ என்ற தலைப்பில்
இந்தியாவின் மிகப்பெரிய ஓவியப் போட்டியான ‘ஃபீட் பை ஆர்ட்’ 2021-ல் இரண்டாம் பரிசைப் பெற்றுள்ளார்.
இந்தத் தேசிய அளவிலான ஓவியப் போட்டியை “நெய்பர்ஹுட்” என்னும் அறக்கட்டளை ஏற்பாடு செய்தது. மாணவி டொனெட்டா இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள போட்டியாளர்களுடன் போட்டியிட்டு தனது ஓவியத்திறனை நிரூபித்தார். இவரது சாதனைக்குப் பள்ளி நிர்வாகம் பாராட்டு தெரிவித்துள்ளது.