வேப்பூர் அருகே சாலையோர புளிய‌மரம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு …

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் புளியமரம் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது. கடலூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில்,வரிசையாக  நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான புளியமரங்கள்  உள்ளது.  நேற்று பகல் 11:30 மணியளவில் வேப்பூர் அருகிலுள்ள என்.நாரையூர் அருகே, நெடுஞ்சாலையோர புளிய‌மரம் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இது குறித்து  தகவலறிந்த வேப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சண்முகம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மரத்தில் எரிந்த  தீயை அனைத்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »