விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் மெகா தடுப்பூசி முகாம்!

விக்கிரவாண்டி – விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் டீன் குந்தவி தேவி தலைமை தாங்கி நடந்த தடுப்பூசி முகாமினை துவக்கி வைத்தார் .
மருத்துவ மனைக்கு வந்திருந்த நோயாளிகளின் உதவியாளர்கள், பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர் . மருத்துவ கண்காணிப்பாளர் புகழேந்தி, ஆர்.எம்.ஓ., சாந்தி, ஏ.ஆர்.எம்.ஓ., ஸ்ரீராம் ,வெங்கடேசன் மற்றும் டாக்டர்கள் ,செவிலியர்கள் முகாமில் பங்கேற்றனர் . விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரியில் மெகா தடுப்பூசி முகாம் டீன் குந்தவி தேவி தலைமையில் நடந்தது. அருகில் மருத்துவ கண்காணிப்பாளர் புகழேந்தி. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »