வியாசர்பாடி பகுதியில் மிரட்டி செல்போன் பறித்துச் சென்ற 2 நபர்கள் கைது. 2 செல்போன்கள் பறிமுதல்…

சென்னை, மாதவரம், பெருமாள் கோயில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இந்திரஜித், வ/21, த/பெ.கண்ணன் என்பவர் இரவு சுமார் 08.00 மணியளவில், வியாசர்பாடி, ‘A‘ கல்யாணபுரம் அருகில் நின்று கொண்டிருந்த போது, அவ்வழியே வந்த 2 நபர்கள் இந்திரஜித்தை மிரட்டி பணம் கேட்டனர். இந்திரஜித் பணம் தர மறுக்கவே, 2 நபர்களும், இந்திரஜித்தை மிரட்டி அவர் வைத்திருந்த 2 செல்போன்களை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்து இந்திரஜித் P-3 வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

P-3 வியாசர்பாடி காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை செய்தும், சம்பவ இடத்தினருகில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்தும், மேற்படி வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட 1 .அரிஷ் மாலி (எ) மார்லி, வ/21, த/பெ.பத்ரிலால், அம்பேத்கர் தெரு, கிருஷ்ணமூர்த்திநகர், கொடுங்கையூர், 2.ரூபன் (எ) பரால், வ/21, த/பெ. பன்னீர்செல்வம், ‘A‘ கல்யாணபுரம் 3வது தெரு, வியாசர்பாடி, சென்னை ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து புகார்தாரரின் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் எதிரிகள் அரிஷ்மாரி மீது P-2 ஓட்டேரிமற்றும் C-2 யானை கவுனிகாவல் நிலையங்களில் தலா 2 செல்போன் பறிப்பு வழக்குகளும், ரூபன் மீது 1 அடிதடி வழக்கும் உள்ளது தெரிய வந்தது.

கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »