விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை ரயில்வே காலனியில் அமைந்திருக்கும் சித்தி விநாயகர் செல்வ முத்துக்குமார திருக்கோவிலில் 81 கிலோ எடையுள்ள முக்குறுணி கொழுக்கட்டை

தமிழ் கடவுளாம் முதல் கடவுளான ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி நாளை நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது.


தொழிலோ வேலையோ கல்வியோ எந்த ஒரு பணி செய்ய ஆரம்பித்தாலும் முதலில் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிப்பது இந்துக்களிடையே முக்கியமான பாரம்பரியமாக இருந்து வருகிறது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகப் பெருமானுக்கு பிடித்தமான கொழுக்கட்டை சுண்டல் பொறி அவுல் பழங்கள் போன்றபொருட்கள் விற்பனை களை கட்டியது.
விநாயகருக்குப் பிடித்தமான கொழுக்கட்டை அதிலும் பெரிய அளவில் கொலக்கட்டை தயாரிப்பதில் திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் மீனாட்சி அம்மன் கோவில் முக்குறுணி விநாயகர் மற்றும் ரயில்வே காலனி பகுதியில் அமைந்திருக்கும் சித்தி விநாயக முத்துக்குமாரசுவாமி திருக்கோயில்.
மதுரை நகரின் மையப்பகுதியான ரயில்வே நிலையம் பின்புறம் அமைந்துள்ளது ரயில்வே காலனி.
இந்த ரயில்வே காலனியில் அமைந்திருக்கும் ஸ்ரீ சித்திவிநாயகர் முத்துக்குமார திருக்கோவில் 76 ஆண்டுகளுக்கு மேலாக மிகவும் புகழ்பெற்ற பாரம்பரியமாக அப்பகுதி மக்களின் தெய்வமாக இருந்து வருகிறது.


மேலும் இக்கோவிலில் அமைந்துள்ள முத்துக்குமாரசுவாமி ஸ்தலமூர்த்தியாக விளங்கி வருகிறது. இக்கோவிலில் சனீஸ்வர பகவான் தனி சன்னதியாகவும் ஐயப்பன் கருப்பண்ணசுவாமி சிவன் பார்வதி என்று அனைத்து தெய்வங்களும் அருள்பாலித்து வருகின்றனர்.
இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சடகோப ராமானுஜ ஐயப்ப ரத்த சபையினர் சார்பாக குருநாதர் பாலாஜி சுவாமி தலைமையில் 9 நபர்கள் கொண்ட இரு குழுக்களாக33 கிலோ பச்சரிசி 18 கிலோ வெல்லம் தேங்காய் 9 கிலோ நல்லெண்ணெய் 9 கிலோ நெய் 9 கிலோஉள்ளிட்ட பொருட்களை வைத்து 81 கிலோ எடையுள்ள முக்குருணி கொழுக்கட்டை செய்தனர்.
காலை 9 மணி அளவில் ஆரம்பித்து விநாயகர் சதுர்த்தி மதியம் 3 மணிக்கு நிறைவந்த இந்த கொழுக்கட்டை படையல் மாலை 6 மணிக்கு நடைபெற்ற விநாயகர் சதுர்த்திக்கு படைக்கப்பட்டு விசேஷ பூஜைகள் செய்து பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது என்று கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் உபயோகிக்கப்பட்டது.இந்தக் கொழுக்கட்டை தயாரிப்பதற்கு ஆன மொத்த நேரம் ஐம்பத்தி நான்கு மணி நேரங்கள்
இந்த முத்துக்குமார சுவாமி திருக்கோவில் தொண்ணூற்று ஆறு வருடங்களுக்கு முன்பு இலங்கையில் இருந்து கண்டி கதர்காமம் என்ற ஊரில் இருந்துபிடி மண் எடுத்து வரப்பட்டு வேலாயுதம் ஆக பூஜிக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து எழுபத்தி ஆறு வருடமாக முத்துக்குமாரசுவாமி ஆக வீட்டிலிருந்து ரயில்வே காலனி மக்களுக்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார் என்பது தனிச்சிறப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »