விக்கிரவாண்டி பேரூராட்சி பஸ் நிலையத்தில் மெகா தடுப்பூசி முகாம்!!

விக்கிரவாண்டி – விக்கிரவாண்டி பேரூராட்சி பஸ் நிலையத்தில்  நடந்த தடுப்பூசி முகாமிற்கு செயல் அலுவலர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். தனி தாசில்தார் கணேசன் முன்னிலை வகித்தார் . முன்னாள் சேர்மன் அப்துல் சலாம் முகாமினை துவக்கி வைத்தார். விக்கிரவாண்டி மற்றும் சுற்றுப்புற கிராம பொதுமக்கள் முகாமில் பங்கேற்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர் .
டாக்டர் பாலாஜி அய்யனார், சுகாதார ஆய்வாளர் பிரதிவிராஜ்,பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் விஸ்வநாதன்,மேற்பார்வையாளர் ராமலிங்கம் , தி.மு.க., நகர செயலாளர் நைனாமுகமது மற்றும் சுகாதார துறை,வருவாய் துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »