வளசரவாக்கம் பகுதியில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து தங்கநகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த வழக்கில் இருவர் கைது. 1 ½ சவரன் தங்கநகை, 3 செல்போன்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்…

சென்னை, வளசரவாக்கம் பகுதியில் வசித்து வரும் துணைநடிகையான 38 வயது பெண் கடந்த இரவு சுமார்  10.30 மணியளவில் தனது வீட்டில் இருந்த போது, அங்கு வந்த ஒருநபர் மேற்படி பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறிது நேரத்தில் அங்கு வந்த மற்றொரு நபருடன் சேர்ந்து மேற்படி பெண்ணை மிரட்டி 1 1/2 சவரன் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் ரூ. 50,000/- பறித்துக் கொண்டு இருவரும் தப்பியுள்ளனர். இதுகுறித்து மேற்படி பெண்மணி R-9  வளசரவாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

R-9 வளசரவாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவயிடத்திற்கு சென்று தீவிர விசாரணை செய்தனர். மேலும் சம்பவயிடத்தின் அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட 1.செல்வக்குமார், வ/21, த/பெ. செல்வராஜ், எண்.36, கந்தசாமிநகர், 7வது தெரு, மதுரவாயல், சென்னை 2.கண்ணதாசன்,வ/37, த/பெ.ராஜகோபால், எண்.22, பராதிநகர், இராமபுரம் சென்னை ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ½ சவரன் தங்க நகைகள், 3 செல்போன்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »