வருஷ நாட்டில் வனத்துறையினரை கண்டித்து மாபெரும் பஸ் மறியல் போராட்டம்….

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியம் மேகமலை உள்ளிட்ட ஒன்பது ஊராட்சிகளை சேர்ந்த முப்பத்தி ஒன்பது கிராம விவசாயிகள் சார்பாக வருஷநாடு பேருந்து நிலையம் அருகே வருஷநாடு மேகமலை உள்ளிட்ட வன விவசாயிகள் மற்றும் அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு கடமலை மயிலை ஒன்றியம் சார்பாக ஒன்றியக்குழு தலைவர் கண்ணன் தலைமையில் மாபெரும் பஸ் மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் முப்பத்தி ஒன்பது வன கிராம மக்களுக்கு வன உரிமைச் சட்டப்படி பட்டா வழங்க கோரியும் புலிகள் சரணாலயம் என்ற பெயரில் மலை கிராம மக்களை வெளியேற்றும் போக்கை கண்டித்தும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 700 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். மேலும் வருஷநாடு வியாபாரிகள் சங்கம் மூலம் கடையடைப்பு செய்து விவசாயிகளுக்கு ஆதரவாக இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசியபோது மேகமலை கூப்பு காட்டிற்கு மரங்கள் நடுவதற்கு பராமரிப்புச் செய்வதற்கும் பணியாற்ற எங்கள் முன்னோர்களை அழைத்து வந்துள்ளனர். அன்றிலிருந்து இன்று வரை மூன்று தலைமுறையாக நாங்கள் நொச்சி ஒடை இந்திராநகர் அரசரடி மேகமலை வண்டியூர் வீரசின்னம்மாள் புரம் காந்திகிராமம் பால சுப்பிரமணிய புரம் உட்பட பல கிராமங்களில் மூன்று தலைமுறைகளாக வசித்து வருகிறோம்.

எங்களுக்கு அரசு சார்பில் மின்சாரம் சாலை குடிநீர் அங்கன்வாடி மையம் பள்ளிக்கூடம் ரேஷன்கடை மருத்துவமனை பேருந்து வசதி போன்ற அடிப்படை வசதிகளையும் ஆதார் ரேஷன் கார்டு வாக்காளர் அடையாள அட்டை போன்ற அரசு அங்கீகாரங்களையும் வழங்கியது தற்போது எங்களை வெளியேற்ற சொல்லி வனத்துறையினரும் மூலம் நோட்டீஸ் அனுப்பி மிகவும் நெருக்கடியான சூழ்நிலையை உருவாக்குகின்றனர் நிலப் பராமரிப்பு செய்யக்கூடாது என்றும் மின் இணைப்பு துண்டிக்கப்படும். புதிய மின் இணைப்பு தரப்பட மாட்டாது எனவும்  வீடு பராமரிப்பு செய்யக்கூடாது எனவும் மீறி செய்தால் பராமரிப்புக்கு பயன்படுத்தக்கூடிய டிராக்டர் ஏர் கலப்பை ஏர் மாடுகள் அனைத்தும் தேசிய உடமை ஆக்கப்படும் எனவும் மீறி செய்தால் வழக்குப்பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை செய்தும் வரும்  வனத்துறை மற்றும் மத்திய அரசை கண்டித்து மூன்று மணி நேரத்திற்கும் மேலாக சாலைமறியல் ஏற்பட்டது .இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது பாதுகாப்பு பணியில் ஏடிஎஸ்பி சங்கரன் தலைமையில் கடமலைக்குண்டு காவல் ஆய்வாளர் குமரேசன் சார்பு ஆய்வாளர்கள், வருசநாடு அருண்பாண்டி, மயிலாடும்பாறை சதீஷ் கடமலைக்குண்டு லதா மற்றும் சக காவலர்கள் தனிப்பிரிவு காவலர்கள் உட்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து வருஷ நாட்டில் உள்ள இரண்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »