வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியம் வேர்ல்டு விஷன் இந்திய மயிலாடும்பாறை வட்டார வளர்ச்சி திட்டமும் தேனி சைல்டு லைன் இணைந்து தும்மக்குண்டு மற்றும் முறுக்கோடை பஞ்சாயத்து அளவிலான விழிப்புணர்வு பற்றிய பயிற்சி முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் இளம் வயது திருமணத்தை தடுத்தல், நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் பற்றி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு மற்றும் குழந்தைகளுக்கான நான்கு உரிமைகள், வாழும் உரிமை வளர்ச்சிக்கான உரிமை பாதுகாப்பு உரிமை, பங்கேற்கும் உரிமை போன்ற நிகழ்வுகளை பாடல் மற்றும் கதைகள் மூலமாக விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் வேர்ல்டு விஷன் திட்ட மேலாளர் ஜேசு கரன் தங்கராஜ் முன்னிலையிலும் முறுக்கோடை பகுதி ஒருங்கிணைப்பாளர் ஜான் ஜோதி விருமாண்டி மற்றும் தேனி சைல்டு லைன் பகுதி ஒருங்கிணைப்பாளர் முனீஸ்வரன் பிரேமா ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இது போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்திய வேர்ல்டு விஷன் இந்திய மயிலாடும்பாறை வட்டார வளர்ச்சி நிறுவனத்திற்கு இப்பகுதி மக்கள் நன்றியை தெரிவித்தனர்.