வருஷநாடு கடமலை மயிலை ஒன்றியத்தில் ஊர்தோறும் வானகம் பயிற்சி முகாம் நடைபெற்றது…

வருஷநாடு கடமலை மயிலை ஒன்றியத்தில் 10.10.2021 அன்று ஊர்தோறும் வானகம் என்ற தலைப்பில் நடந்த இடுபொருட்கள் பயிற்சி தமிழகத்தில்  21 இடங்களில் நடைப்பெற்றது. இதில் 837 நபர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். அந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற பல நண்பர்கள் மீண்டும் இப்பயிற்சி நடைபெற வேண்டும் என்று ஆவலுடன் கேட்டுக் கொண்டனர். அதனை ஒட்டி 24.10.2021 தேதியில்   ஊர்தோறும் வானகம் என்ற தலைப்பில் மீண்டும் இடுபொருட்கள் பயிற்சியை நடத்த வானகம் திட்டமிட்டபடி நடைபெற்றது
இப்பயிற்சியில்
1. அமுத கரைசல் 2. பஞ்ச காவ்யா 3. மீன் அமிலம் 4. பூச்சி விரட்டி 5. பழக்காடி (  EM ) 6. தேமோர் கரைசல் 7. மூடாக்கு 8. பலதானிய பயிர் சாகுபடி போன்ற தலைப்புகளில் செயல்முறை விளக்கமளிக்க திட்டமிட்டுள்ளோம். நண்பர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். 
பயிற்சி காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெற்றது
பயிற்சி மையம் :- வெ.பாலசுப்ரமணியன்,வசந்தம் இயற்கை தோழமை மையம், கிழியன்சட்டி மலை அடிவாரம், கடமலைக்குண்டு, தேனி மாவட்டம். பயிற்சியாளர்கள் வெ.பாலசுப்ரமணியன் | ச. பெரோஸ்கான் | உட்பட ஏராளமான சமூக ஆர்வலர்கள் விவசாயிகள் கலந்து கொண்டனர். சமூக ஆர்வலர் வசந்தம் குணசேகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »