விழுப்புரம் மாவட்ட முஸ்லிம் மக்கள் கழகத்தின் அமைப்புச் செயலாளராகவும், மாநில பொதுக்குழு உறுப்பினராகவும் கணபதிபட்டு தாமோதரன் நியமனம் செய்யப்பட்டார்.முஸ்லிம் மக்கள் கழகத்தின் விழுப்புரம் மாவட்ட அமைப்புச் செயலாளராகவும், மாநில பொதுக்குழு உறுப்பினராகவும் திண்டிவனம் வட்டம், வேலூர் அடுத்த கணபதிப்பட்டு பகுதியை சேர்ந்த கன்னியப்பன் என்பவரது மகன் தாமோதரன் என்பவரை முஸ்லீம் மக்கள் கழக மாநில பொருளாளர் அப்துல் காதர், மாநில செய்தி தொடர்பாளர் ராஜா, மாநில இளைஞரணி தலைவர் விக்ரம், விழுப்புரம் மாவட்ட தலைவர் ஆரியசாமி, செயலாளர் வெங்கடேசன் ஆகியோரின் பரிந்துரையின் பேரில் முஸ்லிம் மக்கள் கழக நிறுவனத்தலைவர் முனைவர் ஜைனுதீன் நியமனம் செய்தார்.