முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லுாரி போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., ஸ்ரீநாதா திடீர் ஆய்வு

விக்கிரவாண்டி – முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையிலுள்ள புறக்காவல் நிலையத்தில் எஸ்.பி., ஸ்ரீநாதா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில்ஏ.டி.எஸ்.பி., அலுவலகத்தில் பணிபுரியும்  சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் பிரகலாதன் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  நேற்று பிற்பகல் அவரை மருத்துவ மனையில் பார்க்க வந்த எஸ்.பி., ஸ்ரீநாதா மருத்துவ மனை வளாகத்தில் செயல்படும் புறக்காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்தார்.


அப்போது பதிவேடுகள் கையாளுவது குறித்தும் , குற்றவழக்குகளில் காயம்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் விபரம் குறித்து சம்பந்தப்பட்ட டி.எஸ்.பி., அலுவலகத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டுவது குறித்தும், ஸ்டேஷனில் குறைகள் ஏதாவது உள்ளதா எனவும் கேட்டறிந்தார்.


விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர்கள் பழனிவேல், சங்கர் மற்றும் போலீசார் உடனிருந்தனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »