முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் உலக சுற்றுச் சூழல் தினம் கொண்டாட்டம்

முகப்பேரில் அமைந்துள்ள வேலம்மாள் முதன்மைப் பள்ளி ஜூன் 5 -2022 அன்று உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடுதல்’ , இயக்கத்தை  அதன்  கோ கிரீன் மிஷனில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும்  அசோகா ட்ரீ தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து தொடங்கியது.

பள்ளி மாணவர்களின் இறை வணக்கப் பாடலுடன் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது சிறப்பு விருந்தினர்களாக பாலகிருஷ்ணன் நாயக் பொது மேலாளர் HR (IOCL) மற்றும் ஸ்ரீமதி ஸ்ரவண ராஜன்,தி. அசோகா  ட்ரீ,NGO மற்றும் பள்ளியின் முதன்மை முதல்வர் கே.எஸ். பொன்மதி கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்கள் மரங்களை வளர்ப்பதன் முக்கியத்துவம், எதிர்காலத்தில் இயற்கையை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து உரையாற்றினர். மேலும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையில் நாம் வாழும் இடத்தை சிறந்த சுற்றுச் சூழலுடன் எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர். நடப்பட்ட மரக் கன்றுகளை பராமரித்தல். அதிக அளவு மரங்களை நடுதல், மற்றவர்களையும் அவ்வாறு ஊக்குவிப்பது போன்று பல்வேறு நிகழ்ச்சிகள் மாணவர்களால் நிகழ்த்திக் காட்டப்பட்டது. மாணவர்கள் பசுமை உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். 

இந்த மரக்கன்றுகள் நடுதல் இயக்கமானது மாணவர்களின் அறிவுசார் மற்றும் சமூக வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான வேலம்மாளின் தனித்துவ முயற்சியாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »