மாம்பலம் பகுதியில் மருமகள் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மாமியாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 10,000/-அபராதம் விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு…

சென்னை, மாம்பலம், மேட்லி 2 வது தெரு என்ற முகவரியில் ஷாகின், வ/25, க/பெ.சாகுல் அமீது என்பவர் தனது கணவர் மற்றும் குடும்பத்தினருடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்தார். ஷாகினுக்கும் அவரது மாமியார் தாஜ்நிஷா என்பவருக்கும் குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.இந்நிலையில் கடந்த 26.11.2014 அன்று ஷாகினுக்கும் அவரது மாமியார் தாஜ்நிஷா என்பவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த தாஜ்நிஷா தனது மருமகள் ஷாகின் கட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, அவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியுள்ளார். இதில் படுகாயமடைந்த ஷாகின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிசிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்கமால் 17.12.2014 அன்று இறந்து விட்டார். இது குறித்து R-1 மாம்பலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து மேற்படி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட தாஜ்நிஷா, வ/50,க/பெ. ஜபருல்லா என்பவரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கு தொடர்பாக, சென்னை, மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், R-1 மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தும், முறையாக சாட்சிகளை ஆஜர்படுத்தியும், வழக்கு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக கண்காணித்து வந்த நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகளின்படி வழக்கு விசாரணை முடிவடைந்து இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எதிரி தாஜ்நிஷா மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், தாஜ்நிஷா, வ/57, க/பெ.ஜபருல்லா என்பவருக்கு ஆயுள் தண்டனையும், அபராதம் ரூ.10,000/-ம், அபராதம் கட்ட தவறினால் மேலும்  6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பு வழங்கினார். மேற்படி வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்புகவனம் செலுத்தி குற்றவாளிக்கு உரியதண்டனை பெற்று தந்த R-1 மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற அலுவல் பணிபுரியும் காவல் குழுவினரை, காவல் உயரதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »