மதுரை – தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டு வந்தது. இந்தசூழ்நிலையில் மதுரை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ,மாணவிகளின் படிப்பு திறனை வளர்ப்பதற்கும், ஆன்லைன் மூலம் கல்வி கற்பதற்கும், தொழில் திறனை மேம்படுத்துவதற்கும்,மாணவர்களுக்கு அறிவியல் சார்ந்த சிந்தனையை வளர்த்துக் கொள்வதற்கும், பள்ளிகளில் தொழில்நுட்ப கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் ஏதுவாக ஹெச்.சி.எல். நிறுவனத்தின் சார்பில் மாநகராட்சியின் 14 மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ,மாணவிகள் பயன்பெறும் வகையில் 92 கணினிகளை ஹெச்.சி.எல்.நிறுவனத்தின் செயல் இயக்குனர் மாநகராட்சிஆணையாளர் அவர்களிடம் இன்று வழங்கி பள்ளி தலைமைஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஹெச்.சி.எல் நிறுவனத்தின் செயல் இயக்குனர் திருமுருகன், துணை பொது மேலாளர் பிரகாஷ்ராமன், மேலாளர் பிரிஜோ, உதவி மேலாளர் சாமுவேல் எபினேசர், திட்ட அலுவலர் பிரபாகர்,அமெரிக்கன் இந்தியன் பவுண்டேசன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஷர்மிளா, தலைமை ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.