மதுரை மாவட்டம் ஐராவதநல்லூரில் லைட் ஒர்க்கர்ஸ், பிராணிக் ஹீலிங், ஆர்ஹாடிக யோகா மற்றும் மதுரை மாநகராட்சி சார்பாக covid-19 தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இம்முகாமில் ஐராவதநல்லூர் விரகனூர் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர். இம்முகாமில் சிறப்பு விருந்தினர்களாக இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி இணை செயலாளர் கணேசன்,மதுரை சிவில் பொறியாளர்கள் சங்க தலைவர் ரமேஷ் குமார் மற்றும் விநாயகமூர்த்தி மணிகண்டன், லட்சுமிகாந்தன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஞானப் பிரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.