மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திமுக இளைஞரணி சார்பாக நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது..

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பொங்கல் பண்டிகையில் திமுக இளைஞரணி சார்பாக நடைபெற்ற பானை உடைத்தல், சாக்குப் பை ஓட்டம்,சோடாபாட்டில் நிகழ்ச்சிகள்  – ஆண்கள் பெண்கள் சிறுவர் சிறுமியர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்

பொங்கல் பண்டிகை என்பது தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையாகும். விவசாயத்தை போற்றும் வகையில் கதிரவனுக்கு நன்றி செலுத்தும் ஒரு பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பொங்கல் பண்டிகையை தமிழகத்தில் ஏராளமான கிராமங்களில் சாக்குப்பை ஓட்டப்பந்தயம் பானை உடைக்கும் போட்டி இளவட்டக்கல் தூக்குதல் சோடா பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.
இதில் ஆண்கள் பெண்கள் சிறுவர் சிறுமிகள் எனஅனைவரும் ஆர்வத்துடன் உற்சாகமாக கலந்துகொண்டு பங்கேற்பர்.

அந்த வகையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சாக்குப் பை ஓட்டம் பானை உடைக்கும் போட்டி சோடா பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

திமுக நகர இளைஞரணி சார்பாக இளைஞரண அமைப்பாளர் எஸ்பிஎம் சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்நகர செயலாளர் தங்கமலைபாண்டி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் விஜய், நகர இளைஞரணி துணை அமைப்பாளர் கீழப்புதூர் சரவணன், ஜெகன், தினேஷ், மகளிரணி மாவட்ட துணை அமைப்பாளர் அனுராதா, வார்டு அமைப்பாளர்கள் விஜி கோகுல் ரவி, இளையராஜா, சிவசந்திரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »