வருஷநாடு கடமலை மயிலை ஒன்றியம் பொன்னன் படுகை ஊராட்சியில் திட்டத்திற்கு தெற்கு பொன்னன் படுகை சென்ராயபுரம் கொங்கரவு பரமக்குடி காமன்கல்லூர் அரண்மனை புதூர் ஆகிய ஏழு கிராமங்களில் சுமார் 2500 மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் செய்யவேண்டிய வளர்ச்சிப் பணிகள் ஏராளமாக உள்ளது. ஆனால் போதிய நிதிவசதி இல்லாததால் ஊராட்சி பணிகளில் சுணக்கம் ஏற்படுகிறது. மாவட்ட நிர்வாகம் நிதி வழங்கி ஊராட்சியின் வளர்ச்சி பணிக்கு உதவ வேண்டும் எனவும், தெய்வேந்திர புரம் கொங்கரவு ஆயர் கிராமங்களுக்கு சுடுகாட்டிற்கு தேவையான பாதை வசதி இல்லாததால் மக்கள் சிரமப்படுகின்றனர் என்றும், ஒரு சில இடங்களில் தனிநபரின் ஆக்கிரமிப்பு உள்ளதாகவும், அதை அகற்றி ஊராட்சியின் வளர்ச்சி கட்டிடங்களுக்கு உதவிட யூனியன் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சுடுகாட்டிற்கு தேவையான பாதையை ஏற்படுத்தி தர இரு கிராம பொதுமக்கள் சார்பாக ஊராட்சி மன்ற தலைவர் பூங்காவனம் காத்தமுத்து கோரிக்கை வைத்துள்ளார்.