சென்னை, ஓட்டேரி, பெரம்பூர் பேரக்ஸ் ரோடு, நாராயண மேஸ்திரி தெரு, எண்.11/5 என்ற முகவரியில் வசித்து வந்த லோடு ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷ், வ/41, த/பெ. ஶ்ரீதர் என்பவர் பெரிய மேடுபகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் இறந்து கிடப்பதாக மேற்படி தங்கும் விடுதியின் மேலாளர் கபீர் அகமது என்பவர் G-2 பெரியமேடு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்து பிரேதத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து ச/பி.174 கு.வி.மு.ச சந்தேக மரண பிரிவில் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் பிரகாஷ் உடலை பிரேத பரிசோதனை செய்த அரசு மருத்துவமனை மருத்துவர், பிரேத பரிசோதனை அறிக்கையில் பிரகாஷ் தலையில் அடிப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்ததின் பேரில் G-2 பெரியமேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்தனர். மேலும் சம்பவத்தன்று பிரகாஷ் அறையில் ஒன்றாக தங்கிருந்த ப்ரியா என்பரிடம் விசாரணை செய்ததில், இருவரும் கடந்த சில வருடங்களாக தொடர்பில் இருந்து வந்ததும், கடந்த இரவு இருவரும் மேற்படி தங்கும் விடுதியில் அறை எடுத்து மது அருந்தி விட்டு உல்லாசமாக இருந்த போது, இருவருக்குமிடையே நடந்த வாய் தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த ப்ரியா, பிரகாஷை கீழே தள்ளியுள்ளார். இதில் தலையில் காயமடைந்த பிரகாஷ் சம்பவயிடத்திலே இறந்துள்ளது தெரிய வந்தது.
அதன் பேரில் தனிப்படை காவல் குழுவினர் தீவிர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டை நடத்தி ச/பி.174 கு.வி.மு.ச பிரிவில் பதிவு செய்யப்பட்ட இவ்வழக்கினை கொலை வழக்காக மாற்றம் செய்து ப்ரியா, வ/42, க/பெ. பெருமாள், எண்.17/4, சின்னதம்பி தெரு, கொசப்பேட்டை, சென்னை என்பவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ப்ரியா விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.