புழல் பகுதியில் சேர்ந்து வாழ்ந்த பெண்ணிடம் தகராறு செய்து கொலை செய்த சரித்திர பதிவேடு குற்றவாளி கைது..

சென்னை – புழல், லஷ்மி அம்மன் கோயில் தெரு, எண்.3 என்ற முகவரியில் வசிக்கும் சபரி (எ) சபரிதா, பெண் வ/29, த/பெ.ராமமூர்த்தி என்பவர் தமிழரசன், வ/31, த/பெ. முனிவேல் என்பவருடன் கடந்த 3 மாதங்களாக ஒன்றாக சேர்ந்து கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்தனர். 08.12.2021 காலை சுமார் 07.00 மணியளவில் தமிழரசன், சபரி (எ) சபரிதாவிடம் தகராறு செய்து தாக்கி துப்பட்டாவால் கழுத்தை நெறிந்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். இது குறித்து சபரி (எ) சபரிதாவின் தந்தை ராமமூர்த்தி என்பவர், M-3 புழல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில், வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

M-3 புழல் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவயிடத்திற்கு சென்று, பிரேதத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டு, மேற்படி கொலை சம்பவத்தில் ஈடுபட்ட தமிழரசன், வ/31, த/பெ.முனிவேல், எண்.3, லஷ்மி அம்மன் கோயில் தெரு, புழல், சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து தப்பிச் செல்வதற்காக பயன்படுத்திய 1 இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட தமிழரசன் மற்றும் கொலை செய்யப்பட்ட சபரி (எ) சபரிதா ஆகிய இருவரும் ஒரே வீட்டில்கடந்த 3 மாதங்களாக கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்ததும், தமிழரசன் மேற்படிசபரி (எ) சபரிதாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு, தகராறு செய்து சம்பவத்தன்று கை மற்றும் துப்பட்டாவால் சபரி (எ) சபரிதாவின் கழுத்தை நெரித்து கொன்றது தெரியவந்தது. மேலும்விசாரணையில்தமிழரசன்மீது 3 கொலை வழக்குகள், 4 கொலைமுயற்சி வழக்குகள், கஞ்சா, திருட்டு, அடிதடிஉட்பட 14 குற்ற வழக்குகள் உள்ளதும், இவர் திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் காவல்நிலைய சரித்திரபதிவேடு குற்றவாளி என்பதும் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட தமிழரசன் விசாரணைக்குப் பின்னர், நீதிமன்றத்தில்ஆஜர் செய்யப்படவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »