புளியந்தோப்பு பகுதியில் நிறுத்தியிருந்த இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்ற சரித்திர பதிவேடு குற்றவாளி உட்பட 2 நபர்கள் கைது. 1 இருசக்கர வாகனம் பறிமுதல்.

சென்னை, பட்டாளம், அங்காளம்மன் கோயில் 2-வது தெருவில் வசித்து வரும் டில்லிபாபு, வ/39, த/பெ.மணி என்பவர் இரவு மேற்படி தனது வீட்டிற்கு முன்பே இரு சக்கர வாகனத்தை நிறுத்து விட்டு மறுநாள் காலை பார்த்த போது, அவரது இரு சக்கர வாகனத்தை யாரோ திருடிச் சென்றிருந்தனர். இது குறித்து டில்லி பாபு, P-1 புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

P-1 புளியந்தோப்பு காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தினருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்து, மேற்படி இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்ற 1.விஜய் (எ) ஐஎம்சி விஜய், வ/26, த/பெ.ரவி, 13வது தெரு, KM கார்டன், புளியந்தோப்பு, சென்னை, 2.அருண்தேவன், வ/22, த/பெ. தேவன், 13வது தெரு, KM கார்டன், புளியந்தோப்பு, சென்னை ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து புகார்தாரரின் 1 இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் எதிரி விஜய் (எ) ஐஎம்சி விஜய்என்பவர் P-2 ஓட்டேரி காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது 8 வழிப்பறி வழக்குகள் மற்றும் 1 திருட்டு வழக்கு உட்பட 9 குற்ற வழக்குகள் உள்ளது தெரிய வந்தது.

கைது செய்யப்பட்ட விஜய் (எ) ஐஎம்சி விஜய் மற்றும் அருண்தேவன்ஆகிய 2 நபர்களும் விசாரணைக்குப் பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »