புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது.

புளியந்தோப்பு காவல் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் சிறுமிக்கு, கடந்த 25.07.2022 அன்று அதே பகுதியை சேர்ந்த முகமது சலீம் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் தாய் W-18 எம்.கே.பி. நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில், காவல் குழுவினர் விசாரணை செய்தனர்.

மேலும், W-18 எம்.கே.பி. நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினரின் விசாரணையில் எதிரி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உண்மையென தெரிய வந்தது.

அதன் பேரில், W-18 எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முகமது சலீம், வ/56 என்பவரை கைது செய்தனர்.

விசாரணைக்குப் பின்னர், கைது செய்யப்பட்ட முகமது சலீம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »