கன்னியாகுமரி- கன்னியாகுமரி மாவட்டம் விவேகானந்தபுரம் சந்திப்பில் பிஎம்எஸ் பாரதிய ஆட்டோ ஓட்டுனர் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் சுமார் 35 ஆண்டுகளாக உறுப்பினராக இருந்து வந்தவர் திரு என் வசந்தகுமார். சங்கத்தின் தலைவர் செயலாளர் என பல பதவிகளில் இருந்து சங்கத்திற்கு பல நல்ல திட்டங்களை வகுத்துள்ளார். சங்கத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு பிரச்சனை என்றால் ஓடிச்சென்று தீர்வு காண்பதில் வல்லவராக இருந்துள்ளார். அன்னாரின் மறைவு சங்கத்திற்கு மட்டுமல்ல, அவரது குடும்பத்திற்கும் பேரிழப்பாக உள்ளது திரு வசந்த குமார் அவர்கள் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு மரித்து விட்டார். ஆகையால் பி எம் எஸ் பாரதிய ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தின் சார்பாக அன்னாரின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. உடன் கலந்து கொண்டவர்கள் கன்னியாகுமரி காவல் நிலைய துணை கண்காணிப்பாளர் மற்றும் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் கன்னியாகுமரி முன்னாள் பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் மற்றும் சங்க நிர்வாகிகள் தலைவர் செயலாளர் பொருளாளர் மற்றும் வசந்த குமார் அவர்களின் குடும்பத்தார் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்