பாண்டிபஜார் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்துச் சென்ற வழக்கில் மேலும் ஒருநபர் கைது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பூர்வஜா, பெ/வ-19, த/பெ. திருவேங்கடம் என்பவர் இரவு, தி.நகர், பாரி தெருவில் மிதிவண்டியில் சென்று கொண்டிருந்த போது, அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் மேற்படி பூர்வஜா கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் தங்கசங்கிலியை பறித்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். இது குறித்து பூர்வஜா, R-4 பாண்டிபஜார் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

 R-4 பாண்டிபஜார் காவல்நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவயிடத்திற்கு சென்று தீவிர விசாரணை செய்து, மேற்படி சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட வசந்தபிரியன், வ/36, த/பெ.யோகசேகர், விவேகானந்தர் தெரு, அன்பழகன்நகர், திருவள்ளுவர் மாவட்டம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து புகார்தாரரின் 2 சவரன் தங்கச்சங்கிலி மற்றும் குற்றச் சம்பவத்திற்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

 மேலும்,காவல் குழுவினர் தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டு, மேற்படி தங்கச்சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு தலைமறைவான எதிரி மனோஜ் (எ) மனோஜ்குமார், வ/28, த/பெ.கொண்டல்ராவ், வைகுண்ட பெருமாள்நகர், அத்திப்பட்டு, சென்னை-120 என்பவரை கைதுசெய்தனர்.

கைது செய்யப்பட்ட மனோஜ்குமார், விசாரணைக்குப் பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »