நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், வங்கிகள் அரசு அலுவலங்களில் பணியாற்றுவோர் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டதை அதை உறுதி செய்யும் விதமாக சம்பந்தப்பட்ட இடங்களில் அதற்கான ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணியினை மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் துவக்கி வைத்தார்கள்.
இதன்படி வரும் நாட்களில் மாநகரப் பகுதிகளில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் வங்கிகள் அரசு அலுவலகங்கள் மற்றும் இதர இடங்களில் பணியாற்றுவோர் 100% தடுப்பூசி செலுத்தி கொண்டதை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும்
இதுவரை தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்கள் மாநகராட்சி பகுதிகளில் தினசரி நடைபெறும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சென்று தடுப்பூசியினை செலுத்திக் கொள்ள நாகர்கோவில் மாநகராட்சி ஆணையரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது