தொப்பம்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட 16 புதூர் ஊராட்சியில் மக்களை தேடி வருவாய்த் துறை சிறப்பு முகாம்..

திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம் 16 புதூர் ஊராட்சியில் 16 புதூர், தேவத்தூர், சிக்கமநாய்க்கன் பட்டி, உள்ளிட்ட தேவத்தூர் பிர்காவுக்கு உட்பட்ட ஊராட்சிகளில் மக்களை தேடி வருவாய்த்துறை சிறப்பு முகாம், தொப்பம்பட்டி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.தங்கராசு தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் 16 புதூர் ஊராட்சி மன்ற தலைவர் எம்.கிருஷ்ணசாமி, ஒன்றிய கவுன்சிலர் சோமசுந்தரம், தேவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சுதா நடராஜ், சிக்கம நாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 16 புதூர்  துணை தலைவர் வீரக்குமார், ஊராட்சி செயலர் பி.துரைச்சாமி,மண்டல துணை வட்டாட்சியர் ராமசாமி,  முதுநிலை வரைவாளர் சங்கர், முதுநிலை உதவியாளர் பொன்னுச்சாமி, வருவாய் ஆய்வாளர் பூங்கனி, கிராம நிர்வாக அலுவலர்கள் 16- புதூர் -செந்தில் குமார்,தேவத்தூர் – ராஜகுரு,சிக்கமநாய்க்கன்பட்டி- நாராயணசாமி,பருத்தியூர்-என்.வரதராஜன், மஞ்சநாய்க்கன்பட்டி -சத்யா,போடுவார்பட்டி -பட்டத்தய்யன், கொத்தயம்-சுந்தரராஜன் திமுக தொழில்நுட்ப உதவியாளர் முருகேசன் உள்ளிட்டோர் 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.                

மேலும் 36 உழவர் அட்டைகள், 27 பட்டா,சிட்டா, நகல்கள், 10 பட்டா மாறுதல் உள்ளிட்ட  புதிய குடும்ப அட்டைகள் , ஆதார் கார்டுகள், பெறுவதற்கு மனுக்கள் பெறப்பட்டன. முடிவில் 16 புதூர் கிராம நிர்வாக அலுவலர்  செந்தில் குமார் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »