தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை கோவிந்தன் மயில் தாயம்மாள் திருமணமண்டபத்தில் தமிழ்நாடு நீர்ப்பாசன மேலாண்மை நவீன மயமாக்கம் திட்டம்…

தேனி – தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை கோவிந்தன் மயில் தாயம்மாள் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு நீர்ப்பாசன மேலாண்மை நவீன மயமாக்கம் திட்டம்  , வராகநதி TNIAMP 2019-2020 ,சோத்துப்பாறை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் முதலாம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து நடைபெற்றது. 2019-2020 சோத்துப்பாறை உழவர் உற்பத்தியாளர் நிறுவனர் S.ராஜகுரு
வருகை புரிந்த அனைவரையும் வரவேற்புரை ஏற்று சிறப்புரை ஆற்றினார். முன்னிலை இயக்குனர்கள் கலந்துகொண்டனர். தலைமை முனைவர் T.அழகு நாகேந்திரன் விவசாயத்தை பற்றி விவசாய மக்களுக்கு விளக்கஉரை ஆற்றினார். முதன்மை செயல் அலுவலர் ராஜ்குமார் ஆண்டறிக்கை வாசித்தார். மாவட்ட ஆட்சித்தலைவரின்  நேர்முக உதவியாளர் விஷ்னு ராம் மேத்தி மற்றும் பால்ராஜ், நபார்டு வங்கி உதவி பொது மேலாளர்  சசிகுமார் ,அகிலன், முருகானந்தவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். வருகைபுரிந்த அனைவர்க்கும் இனிப்பு,காரம்,காப்பி வழங்கப்பட்டது . தமிழ்நாடு அரசு உத்தரவுப்படி முகக்கவசம் ,கிருமிநாசினி ,சமூக இடைவெளி கடைபிடிக்கபட்டது. இந்நிகழ்ச்சி ஏற்பாட்டினை TNIAMP 2019-2020, சோத்துப்பாறை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் லிமிட் சேகர் வருகை புரிந்த அனைவருக்கும் உபசரித்து நன்றியுரை ஆற்றினார். இக்கூட்டத்தில் 500 க்கு மேற்பட்ட விவசாய பெருமக்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »