தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இந்து முன்னணி மாநில நிறுவனத் தலைவர் ராமகோபாலனின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இந்து எழுச்சி நாள் விழாவாக கொண்டாடப்பட்டது.

ஆண்டிபட்டி –   தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இந்து முன்னணி மாநில நிறுவனத் தலைவர் ராமகோபாலனின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இந்து எழுச்சி நாள் விழாவாக கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு ஆண்டிபட்டியில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக உள்ள காடேஸ்வரா சுப்பிரமணியம் நினைவு மரக்கன்றுக்கு அருகே ராமகோபாலனின் திருவுருவப்படம் வைக்கப்பட்டு மலர்கள் தூவி மரியாதை செய்யப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி மாவட்ட செயலாளர் டாக்டர். எஸ்.பி.எம் செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மொக்கராசு முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய தலைவர் கனகராஜ், நகர தலைவர் கருப்பையா, நிர்வாகிகள் ஜெயபால், ஆட்டோ ராஜகோபால் ,மனீஸ்வரன், முருகேசன், நாகராஜ் இளைஞரணி மனோஜ்குமார் ,அன்னையர் முன்னணி நாகரத்தினம், ஜெயந்தி வழக்கறிஞர் வேல்முருகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து தேனி சாலையில் ஆட்டோ முன்னணி சார்பில் ராமகோபாலன் படம் வைக்கப்பட்டு, மாலை மரியாதை செய்யப்பட்டது. இதனையடுத்து கொப்பயம் பட்டியில் அன்னையர் முன்னணி மாவட்ட செயலாளர் இந்திரா தலைமையில் பெண்கள் பொங்கல் வைத்து ராமகோபாலன் பிறந்தநாள் விழாவை கொண்டாடினார்கள். குறிப்பாக மீனாட்சியம்மன் கோவில் முன்பாக உள்ள தெப்பத்தை சீர்படுத்தி |பயன்பாட்டுக்கு கொண்டுவர ,அரசும் இந்து சமய அறநிலையத் துறையும் நடவடிக்கை எடுக்க நிகழ்ச்சியின் மூலமாக வலியுறுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »