தூத்துக்குடி மாவட்டத்தில் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தனது நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களை தொடங்கியது.

தூத்துக்குடி – இந்தியாவின் பழமையான மற்றும் முன்னணி தனியார்  வங்கிகளில் ஒன்றான தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தனது நூற்றாண்டு விழா  கொண்டாட்டங்களை தமிழகத்திலுள்ள தூத்துக்குடியில் இன்று தொடங்கியது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த நாளை சிறப்பிக்கும் வகையில் தனித்துவமிக்க டிஎன்பி தபால் தலை மற்றும் பிரத்தியோக அஞ்சல் அட்டையை தலைமை விருந்தினராக மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் வெளியிட்டார், மேலும் வாடிக்கையாளர்கள் தங்களது  வங்கி பரிவர்த்தனைகளான பணம் எடுத்தல், பணம் செலுத்துதல், வங்கி கணக்கு புத்தகங்களை அச்சிடுதல் உள்ளிட்ட  சேவைகளை அவர்களுடைய வசிப்பிடங்களில்  நேரடியாக  பெற உதவும் வகையில் (TMB Mobile DigiLobby) வாகனத்தையும் மத்திய நிதி அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  இதன் பின்னர் கோவிட்19 வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக பொதுமக்கள் தடுப்பூசி முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் (Mobile Vaccination camp) வாகனத்தையும் மத்திய நிதி அமைச்சர் தொடங்கி வைத்தார். இறுதியாக விழாவில் மருத்துவம் மற்றும் சுகாதார துறை நிறுவனங்களுக்கு கடன் உதவிகளை மத்திய நிதி அமைச்சர் வழங்கினார். இவ்விழாவில் டிஎன்பி வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி திரு  கேவி ராமமூர்த்தி,MD&CEO,TMB BANK தலைமை தாங்கினார், சிறப்பு விருந்தினராக அஞ்சல்துறை  போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் திரு ஜி நடராஜன், I.P.O.S, Post Master General, மேலும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் கே செந்தில்ராஜ், IAS Collector of Thoothukudi district. மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி வாடிக்கையாளர்கள் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர் ….     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »