திரு.வி.க.நகர் பகுதியில் நள்ளிரவு வீடு புகுந்து செல்போன்கள் திருடிய நபர் கைது. 4 செல்போன்கள் பறிமுதல்..

சென்னை, திரு.வி.க.நகர், வெற்றிநகர், சுந்தரம்தெரு, எண்.8B என்ற முகவரியில் வசித்து வரும் மணிவாசகம், வ/41, த/பெ.ராமன் என்பவர் இரவு வீட்டில் தூங்கிவிட்டு, மறுநாள் காலை சுமார் 06.00 மணியளவில் எழுந்து பார்த்த போது, அவரது செல்போன் மற்றும் வீட்டிலிருந்த உறவினரின் 2 செல்போன்கள் என மொத்தம் 3 செல்போன்கள் திருடு போயிருந்தது தெரிய வந்தது. மேலும், மணிவாசகத்தின் பக்கத்து வீட்டில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தி என்பவரின் செல்போனும் இரவு திருடு போயிருந்தது. இது குறித்து மணிவாசகம் K-9 திரு.வி.கநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

K-9 திரு.வி.கநகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தினருகில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்து, மேற்படி செல்போன் திருட்டில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த விஜய் (எ) காக்காமச்சி, வ/23, த/பெ.சசிகுமார், ஜெகநாதன்தெரு, வெற்றிநகர், திரு.வி.க.நகர் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் எதிரி விஜய் அதிகாலை சுமார் 02.30 மணியளவில், அப்பகுதியில் நோட்டமிட்டு, மணிவாசகத்தின் வீட்டில் புகுந்து அங்கிருந்த 3 செல்போன்கள் மற்றும் பக்கத்து வீட்டில் நுழைந்து 1 செல்போன் என 4 செல்போன்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

மேலும் விசாரணையில், எதிரி விஜய் மீது M-1 மாதவரம் காவல் நிலையத்தில் கஞ்சா, வீடு புகுந்து திருடியது என 3 குற்றவழக்குகள் உட்பட ஏற்கனவே   4 குற்ற வழக்குகள் உள்ளதுதெரியவந்தது. கைது செய்யப்பட்ட எதிரி விஜய் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »